தரமற்ற மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து பொது பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் தலைவர் மீது சட்ட ரீதியில் பதிலளிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தயார் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவு ஒன்றின் ஊடாகவே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மசகு எண்ணெய்யின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் எரிபொருளின் மூலம் உரிய வகையில் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சில தினங்களுக்கு முன்னர் குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார்.










