‘தாத்தா’வாக ஜனாதிபதி கோட்டா வெளியிட்ட முகநூல் பதிவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முகநூல் பதிவு வருமாறு,

எனது பேர்த்தியை முதன்முறையாக நான் தொட்டுத் தூக்கி அணைத்த அந்த தருணம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது!

அண்மையில், ஐ. நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நான் அமெரிக்கா சென்றபோதுதான் – எமது பேத்தியை முதன்முறையாக நேரில் பார்க்கும் பேருவகை தந்த பாக்கியத்தை நாம் பெற்றோம்.

எனது மகன் மனோஜ் மற்றும் மருமகள் செவ்வந்தி ஆகியோர் பெற்றோர் என்ற ஸ்தானத்தை அடைந்தமைக்கு அவர்களை வாழ்த்தியதோடு-

தாத்தா என்ற ஸ்தானத்தை எனக்குத் தந்தமைக்கு எனது நன்றிகளையும் கூறினேன்.

Related Articles

Latest Articles