2ஆவது போட்டியிலும் மண்கவ்வியது சி.எஸ்.கே.!

ஐபிஎல் 2026 தொடரின் 7-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன் படிமுதலில் களம் இறங்கிய சென்னை அணிக்கு தொடக்கத்திலேயே சஞ்சு சாம்சன் வெறும் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

இருப்பினும், 18 வயதான இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 73 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும்.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 28 ரன்களும், இறுதியில் ஷிவம் துபே 27 பந்துகளில் 45 ரன்களும் எடுக்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் வைஷாக் விஜய்குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா (39 ரன்கள்) மின்னல் வேகத் தொடக்கத்தை அளித்தார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் (43) மற்றும் கூப்பர் கோனோலி (36) ஆகியோர் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

நடுவரிசையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்புடன் விளையாடி 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் ஷஷாங்க் சிங் 14 ரன்கள் எடுத்து 8 பந்துகள் மீதமிருக்கையிலேயே அணியை வெற்றி பெறச் செய்தார்.

சென்னை அணிக்கு இது இந்த சீசனில் இரண்டாவது தோல்வியாகும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles