தாய்லாந்தில் பலத்த பாதுகாப்புடன் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தாய்லாந்தில்  தங்கியுள்ள நிலையில்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தாய்லாந்தில் ஹோட்டல்  ஒன்றில்  தற்காலிகமாக   தங்கியுள்ள  நிலையில் பாதுகாப்பு கருதி  குறித்த ஹோட்டலின் பெயர் வெளியிடப்படவில்லை எனவும்  தெரியவந்துள்ளது

இந்த நிலையில்  பாதுகாப்பு நிமித்தம் தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருக்கும் காலப்பகுதியில்   முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவை குறித்த ஹோட்டலில் இருந்து வெளியேறவேண்டாம் என அந்த நாட்டு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles