‘திட்டமிட்டே கொரோனாவை பரப்பியது சீனா’ -ட்ரம்ப் குற்றச்சாட்டு

சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காணொளி  காட்சி வழியாக நடந்த ஐநா பொதுக்கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர், 2ஆம் உலகப் போருக்கு பிறகு உலக நாடுகள் மிகப்பெரிய பேரிடரை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.

சீனா, தனது நாட்டில் உள்நாட்டு விமான சேவைக்கு தடைவிதித்து விட்டு, வெளிநாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கி கொரோனாவை உலகிற்கு பரப்பி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி விட்டதாகவும் சாடினார்.

உலக சுகாதார நிறுவனத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து தவறான தகவல்களை சீனா வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியதாகவும், சீனாவின் இத்தகைய செயல்களுக்கு ஐநா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles