“ தமிழ், சிங்கள புத்தாண்டுவருகின்றது. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 2022 இல் மகிழச்சி இருக்கவில்லை. 2023 இலும் இருக்கவில்லை. எனவே, இந்த வருடம் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். எரிபொருள் விலைகளும் குறைக்கப்பட வேண்டும்.
கல் சாராய போத்தலின் விலை அதிகரித்துள்ளது, இதனால் கசிப்புதான் அருந்துகின்றனர். பார்கள் வெறிச்சோடிபோயுள்ளன. 365 நாட்களும் கசிப்பு குடிக்க முடியாது. புத்தாண்டுக்காவது சாராயம் குடிக்க வேண்டும். எனவே, கல் சாராயம் போத்தலின் விலை குறைக்கப்பட வேண்டும். புத்தாண்டுக்காவது விலை குறைப்பு செய்யவும்.
365 நாட்களும் கசிப்பு அருந்துபவர் ஏப்ரல் 13, 14 ஆம் திகதிகளிலாவது கல் சாராயம் குடிக்கட்டும்.”
இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.










