திருக்குர்ஆன் குறித்து முஸ்லிம்களிடம் உதய கம்மன்பில விடுத்துள்ள சவால்!

” உயிரிழந்தவர்களை கட்டாயம் அடக்கம் செய்யவேண்டும் எனவும், அவர்களின் சடலங்களை எரிப்பது ஹராம் எனவும் திருக்குர்ஆனில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.” – என்று அமைச்சர் உதய கம்மன்பில மீண்டும் இடித்துரைத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” திருக்குர்ஆனை ஆரம்பம் முதல் இறுதிவரை இரண்டு தடவைகள் நன்றாக வாசித்துள்ளேன். அதில் எந்தவொரு இடத்திலும் ‘அடக்கம்’ செய்யப்படுவது கட்டாயப்படுத்தப்படவில்லை. அதேபோல சடலங்களை எரிப்பது ஹராம் (தவிர்க்கப்படவேண்டிய விடயம்) எனவும் குறிப்பிடப்படவில்லை.

நான் குர்ஆன் தொடர்பான நிபுணர் அல்லன். எனவே, என்னால் தெரிவிக்கப்படும் கருத்து தவறெனில், அதனை சரிசெய்யுமாறு – உரிய விளக்கத்தை முன்வைக்குமாறும், எந்த இடத்தில் சடலங்களை எரிப்பது ஹராம் என குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் கோரியிருந்தேன். இதுவரையும் எந்தவொரு நிபுணரும் முன்வரவில்லை.

சிலர் சமூகவலைத்தளங்களில் ஆர்ஆனில் உள்ள சில பதிவுகளை அனுப்பிவைத்திருந்தனர். அடக்கம் செய்யலாம் எனக் கூறப்பட்டிருந்தாலும் அது கட்டாயப்படுத்தப்படவில்லை. எரிப்பது ஹராம் எனவும் அதில் இல்லை.” – என்றார்.

Paid Ad