ஹார்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.
முறையான அனுமதியின்றி இயங்கியது மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, இந்த அதிரடி நடவடிக்கையை ஈரான் கடற்படை மேற்கொண்டுள்ளது.
மொத்தம் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அதில் எபமினோட்ஸ் மற்றும் எம்.எஸ்.சி-பிரான்செஸ்கா ஆகிய கப்பல்கள் பிடிபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பகுதியில் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிடிபட்ட கப்பல்களின் ஆவணங்கள் மற்றும் சரக்குகள் தற்போது தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவம் அந்த முக்கியமான கடல் வழித்தடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றிவரும் நிலையிலேயே அதற்கு பதிலடியாக ஈரான் இவ்வாறு செயல்பட்டுள்ளது.










