திருமணத்துக்காக சேமித்த பணத்தில் வறிய குடும்பத்துக்கு வீடு கட்டிக்கொடுத்த இளம் ஜோடி

திருமணத்துக்காகச் சேமித்த 20 இலட்சம் ரூபா பணத்தில் வறுமை கோட்டில் வாழும் குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளனர் இளம் தம்பதியினர்.

மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனும் யுவதியும் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். குறித்த இளைஞன் மக்கள் வங்கியிலும் அவரது காதலி ஆயுர்வேத வைத்தியராகவும் பணியாற்றி வருகிறார்கள்.பிரபல ஹோட்டல் ஒன்றில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு இரண்டு குடும்பத்தினரும் தீர்மானித்திருந்தனர்.

எனினும் ஒரு நாள் கொண்டாட்டத்துக்காக பிரம்மாண்டமாகத் திருமணம் செய்து பணத்தை வீணடிப்பதற்குப் பதிலாக வறுமையிலுள்ளகுடும்பம் ஒன்றுக்கு உதவுவதற்கு இருவரும் தீர்மானித்தனர்.

அதற்கமைய கணவனை இழந்த 3 பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

தங்கள் திருமணத்துக்காகச் சேமித்த பணத்தைக் கொண்டு அவர்கள் இந்த வீட்டை நிர்மாணிக்க ஆரம்பித்தனர். தற்போது வீடு நிர்மாணிக்கப்பட்டு அக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles