தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து: கொழும்பு, ஹட்டன் வீதியில் இன்று 102 இபோச பஸ்கள் சேவையில்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இன்று (06) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்காக 200க்கும் மேற்பட்ட மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

இந்த விசேட போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று 06 ஆம் திகதி முதல் கொழும்பு, ஹட்டன் வீதியில் 102 இபோச பஸ்களை சேவையில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

07 ஆம் திகதி 75 பஸ்களும், 08 ஆம் திகதி 43 பஸ்களும் இவ்வழியில் சேவையில் ஈடுபடவுள்ளன.

அதேபோல மேலதிக 20 பஸ்களும் தயார் நிலையில் உள்ளன.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles