மஸ்கெலியா, சாமிமலை ஸ்ரஸ்பி தோட்டத்தில் குமரி பிரிவில் ஆட்டோவொன்று தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

புஷ்பராஜ் என்பவரின் ஆட்டோவே, இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

தீயினால் வீட்டின் ஒரு பகுதியும் சேதமாகியுள்ளது.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர் – செ.தி. பெருமாள்
