துருக்கி, சிரியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது – மீட்பு பணி தொடர்கிறது!!

துருக்கி – சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 17 ஆயிரத்து 674 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 3 ஆயிரத்து 377 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்துவிழுந்துள்ளன. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அதேவேளை நிலநடுக்கம் ஏற்பட்டு 5 நாட்கள் ஆன நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் நிலை என்ன? என்பதில் அச்சம் நிலவி வருகிறது. அதேவேளை, நிலநடுக்கத்தால் உணவு, குடிநீருக்கு தடுப்பாடு ஏற்படும் சூழ்நிலை நிலவுவதால் உலக நாடுகள் துருக்கி, சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

Related Articles

Latest Articles