முதியோர் இல்ல தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

ஹெரணை, அங்குருவாதொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் ஹெரனை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

தீ விபத்து ஏற்பட்டவேளை அங்கு சுமார் 72 பேர்வரை இருந்துள்ளனர் என தெரியவருகின்றது.

அதேவேளை, இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக, முதியோர் இல்லத்தின் பணிப்பாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles