தென்னாபிரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி காலமானார்

தென்னாபிரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைச் செயலாளர் நாயகம் மற்றும் ஐ.ந. பெண்கள் அமைப்பின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளருமான (Phumzile Mlambo-Ngcuka , தனது 71ஆவது வயதில் காலமானார்.

அவரது மறைவு தொடர்பான அறிவிப்பை தென்னாபிரிக்க ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

1994ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதலாவது ஜனநாயக அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான அவர், 2005 முதல் 2008 வரை அந்நாட்டின் துணை ஜனாதிபதியாகப் பணியாற்றினார்.

துணை ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு முன்னர், கனிம மற்றும் எரிசக்தி அமைச்சராகவும், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சின் பிரதி அமைச்சராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

துணை ஜனாதிபதியாக இருந்த காலத்தில், வறுமையை ஒழிப்பதற்கான அரசாங்க நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட அவர், குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார்.

2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பான UN Women இன் நிறைவேற்றுப் பணிப்பாளராகப் பதவியேற்றார்.

பெண்களின் உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் ஆகியவற்றை முன்னெடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஐ.நா. பெண்கள் அமைப்பில், அவர் இரண்டு பதவிக்காலங்கள் பணியாற்றியுள்ளார்.

அரசியல், சமூக முன்னேற்றம் மற்றும் பெண்களின் உரிமைகள் சார்ந்த துறைகளில் நீண்டகாலப் பங்களிப்பை வழங்கிய பும்சிலே ம்லாம்போ-ங்குகாவின் மறைவு தென்னாபிரிக்காவில் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.

–

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles