தென் மாகாணத்தில் எலிக்காய்ச்சல் தீவிரம்! 229 பேர் பாதிப்பு – 19 பேர் உயிரிழப்பு

தென் மாகாணத்தில் தீவிரமாக எலிக்காய்ச்சல் தொற்று பரவி வருகின்றது. குறிப்பாக காலி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் 229 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இவர்களுள் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காலி மாவட்ட சமூக வைத்திய நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்தார்.

அசுத்தமான நீர், ஈரமான மண் அல்லது சேற்றில் தொழில் செய்பவர்களுக்கே இந்த நோய் ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மாத்தறை மாவட்டத்திலும் இந்நோய் பரவும் அபாயம் உள்ளது.

விவசாயிகளுக்கு மாத்திரமின்றி கட்டுமானப் பணிகளில் ஈடுபடுபவர்கள், சுத்திகரிப்பு தொழிலாளர்கள், கறுவா, தேயிலை பயிர்ச் செய்கையில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் போன்றோரும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடுமையான காய்ச்சல், உடல் வலி, தசை வலி, கண் சிவத்தல் போன்றன இந் நோயின் அடையாளங்களாகும். இருப்பினும் ஏனைய அறிகுறிகள் இன்றி காய்ச்சல் மட்டும் இருந்தாலும் எலிக்காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இந்நோயினால் பாதுகாப்பு பெற மருத்துவர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் மருந்துகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles