பதவி நீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாளர் பங்கேற்ற நிகழ்வில் பங்கேற்றார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் எஸ். டபிள்யூ. ஆர்.டி பண்டாரநாயக்கவின் 123 ஆவது ஜனன தினம் இன்றாகும்.
இதனைமுன்னிட்டு கொழும்பிலுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
சந்திரிக்கா அம்மையாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பதவி நீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் பங்கேற்றார்.










