வடக்கு மற்றும் தெற்கு அரசியல் களங்களில் 13 ஆவது திருத்தச்சட்டம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்திலும் அடுத்தவாரம் அனல் பறக்கும் கருத்தாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தமது வடக்கு பயணத்தின்போது, 13 ஆவது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளனர்.
எனினும், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் உறுதியான பதிலை வழங்கவில்லை. இந்நிலையில் இவ்விரு அதிகாரங்கள் தொடர்பில் இவர்களின் நிலைப்பாடு என்னவென்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மற்றும் தேசியவாத அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.
ஜுன் மாதத்துக்குரிய 2ஆவது வார நாடாளுமன்ற அமர்வு இன்று (18) ஆரம்பமாகின்றது. இதன்போதும் இவ்விடயம் தொடர்பில் மொட்டு கட்சி கேள்விகளை எழுப்பவுள்ளது.
அதேபோல தமது வடக்கு விஜயம் பற்றியும், 13 தொடர்பிலும் சஜித் மற்றும் அநுர ஆகியோர் நாடாளுமன்றத்தில் கருத்துகளை வெளியிடுவார்கள் எனவும் தெரியவருகின்றது.
