தேங்காய் வாங்கச் சென்ற மூதாட்டி பரிதாப மரணம் – யாழில் சோகம்

யாழ்ப்பாணத்தில் இருந்து பஸ்ஸில் கொடிகாமம் சந்தைக்குத் தேங்காய் கொள்வனவு செய்யச் சென்ற மூதாட்டி திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்., குருநகர் பகுதியைச் சேர்ந்த செபநாயகம் செல்வமலர் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மூதாட்டி நேற்று பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு பஸ்ஸுக்குள் மயங்கிச் சரிந்துள்ளார்.

அதையடுத்து சாரதி, பஸ்ஸில் மூதாட்டியை சாவகச்சேரி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் , மூதாட்டி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

மூதாட்டியின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles