விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சமரி பெரேராவை, தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கு மொட்டு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் தயார் நிலையில் இருக்கின்றார் எனவும் தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ,புத்தளம் மாவட்ட மக்களும் கோரிக்கை விடுத்தால் அரசியலுக்கு வருவது தொடர்பில் பரிசீலிக்கலாம் என சமரி பெரேரா அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










