தேசிய அரசில் பிரதமர் பதவியை கோரினாரா சஜித்?

” தேசிய அரசமைப்பது தொடர்பில் தற்போதைய அரசுடன் எவ்வித கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை.” என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

” அமைச்சு பதவிகள் பற்றியோ அல்லது வரப்பிரதாசங்கள் குறித்தோ அரசுடன் நான் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை. தேசிய அரசு மற்றும் பிரதமர் பதவி பற்றியும் பேசவில்லை.

இருந்தும் அரச தரப்பால் திட்டமிட்ட அடிப்படையில் போல பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் விலைபோகமாட்டார்கள். சூதாட்ட அரசியலில் சிக்க வைக்கவும் முடியாது.” – எனவும் சஜித் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles