ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ள தேசியப் பட்டியல் வாய்ப்பை அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு வழங்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி மொட்டு கட்சி சார்பாக நாமல் சபைக்கு வரவுள்ளார்.
பொதுத்தேர்தலில் மொட்டு கட்சிக்கு இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. தேசியப் பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் என அக்கட்சி சார்பில் மூவர் சபைக்கு செல்கின்றனர்.










