தேசிய பாடசாலை திட்டம் என்பது பட்டியலில் சேர்ப்பதும் பெயர்மாற்றம் செய்வதுமா?

அரசின் தேசிய பாடசாலை திட்டம் என்பது பட்டியலில் சேர்ப்பதும் பெயர்மாற்றம் செய்வதுமா? என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“அரசின் தேசிய பாடசாலை திட்டம் என்பது ஓராண்டுக்கு முன் முன்மொழியப்பட்டது. ஓராண்டு கடந்து, தேசிய பாடசாலைகளாக தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் பெயர்கள் வெயிடப்பட்டுள்ளது. அதன்படி, அப்பாடசாலைகளின் பெயர்கள் மாற்றப்பட உள்ளதாக தெரிய வருகின்றது. இதிலிருந்தே அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களின் நிலைமைகளை நன்கு புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.

தேசிய பாடசாலையாக அங்கீகரித்து விட்டோம் என்பதன் பொருள் என்ன? மாகாண அரசாங்கத்தின் கீழிருந்த பாடசாலையின், உரித்தும் நிர்வாகமும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் பொருள், தேசிய பாடசாலையாக முழுமை மாற்றம் பெற்றுள்ளது என்பது அல்ல. மனிதவள ரீதியாகவும் பௌதீக வள ரீதியாகவும் தேசிய மட்ட பாடசாலை ஒன்றுக்கு சமநிலை பெறுகின்ற போதே தேசிய பாடசாலை மட்டத்தை அடைகின்றது. இதுவே உண்மை நிலை.

இங்கு தேசிய பாடசாலைகளாக இப்பாடசாலைகள் மாற்றப்பட வேண்டும், எந்த அடிப்படையில் அவை தேசிய பாடசாலை என்ற மட்டத்திற்கு உயர்த்தப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. தற்போது இருக்கின்ற பாடசாலைகளில் வளங்கள் நிறைந்த பாடசாலைகளை, அல்லது பெரிய பாடசாலைகளை தேசிய பாடசாலை என்று பெயரிட்டு விட்டால் அது சரியானதா?

அல்லது, தேவையின் அடிப்படையில் சில பாடசாலைகளை தெரிவு செய்து, அவற்றுக்கு அவசியமான மனித, பௌதீக வளங்களை பெற்றுக்கொடுத்து, வளம்நிறைந்த பாடசாலையாக உயர்த்தி, தேசிய பாடசாலை என மாற்றுவது சரியானதா? என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இன்றைய தேசிய பாடசாலை திட்டத்தில் அரசாங்கம் இதில் எதனை செய்ய முற்படுகின்றது என்பது கேள்வியாக எழுகின்றது.

மலையகத்தில் தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம். அவ்வாறு உருவாக்காப்படுவதை நாம் வரவேற்கின்றோம். ஆனால், அதன் போது எமது அரசியல் பலம் மத்திய அரசில் வலுவாக இருக்க வேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் மாகாணத்தில் இருந்து கிடைத்தது கூட, மத்தியில் இருந்து கிடைக்காமல் போய்விடும்.

நாம் கடந்த காலத்திலான ஆயிரம் பாடசாலை திட்டம், அதனுடன் தொடர்புபட்டதான மகிந்தோதய தொழில்நுட்ப கூடம் என்பவற்றை மறந்துவிட கூடாது. அதிலே சிக்கி இன்னும் வெளியே வர முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் பல பாடசாலைகள் உள்ளது. அவற்றில் சில பாடசாலைகள் தொடர்ந்து இயங்குமா என்ற நிலைமை கூட தோன்றி இருக்கின்றது. நடைமுறை கள நிலைமைகள் மற்றும் யதார்த்தத்தை புரிந்துகொண்டு முன்னோக்கி பயணிப்போம்!!

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles