பிரித்தானியாவில் அமைச்சரானார் உமா குமரன்

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில், வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ் இராஜாங்க அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்.

இதன் மூலம் பிரித்தானிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிக்கும் முதல் தமிழ் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

போரால் இலங்கையில் இருந்து இடம்பெயர்;ந்து, பிரித்தானியாவில் குடியேறிய தமிழ் பெற்றோருக்கு பிறந்த உமா குமரன், கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

Related Articles

Latest Articles