உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இடைநிறுத்த உத்தரவிடுமாறுகோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுமீதான விசாரணை 23 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இடைநிறுத்த உத்தரவிடுமாறுகோரி, இராணுவ கேர்ணல் (ஓய்வுநிலை) டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, 23ஆம் திகதிக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்வதற்கு தேவையில்லை என அவரது சட்டத்தரணி உயர்நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 23ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
