தேர்தல் ஆணைக்குழுவின் மேலும் இரு உறுப்பினர்கள் இராஜினாமா

தேர்தல் ஆணைக்குழுவின் மேலும் இரு உறுப்பினர்கள் இராஜினாமா செய்ய தயாராகி வருகின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களை நீக்குவதற்கு பல சக்திவாய்ந்த நபர்கள் கடுமையாக முயற்சித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமையினால் இரண்டு உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன்படி, அவர்களின் பாதுகாப்பிற்காக தலா 4 பொலிஸார் வீதம் எட்டு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாக கூறப்படும் திருமதி சார்லஸின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்கவில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.

Related Articles

Latest Articles