தேர்தல் ஒத்திவைப்பு – மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்

உள்ளாட்சிசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன் ஆரம்பகட்ட விசாரணைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்வதன் காரணமாக விசாரணைகளுக்காக வேறொரு திகதியை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles