” தேர்தல் வேண்டும்” – மஸ்கெலியாவில் போராட்டம்

உள்ளூராட்சிசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்தி மஸ்கெலியா நகரில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான ‘நவ லங்கா சுதந்திரக் கட்சி’யின் நுவரெலியா மாவட்ட பிரதான அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

குறித்த கட்சியின் சார்பில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 3, 500 ரூபா வழங்கப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

Related Articles

Latest Articles