தொடர்ந்து மூடப்படும் உணவகங்கள்

நாட்டில் கடந்த ஒருவார காலமாக லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் நடைபெறவில்லை.

இதனால் தொடர்ந்தும் மக்கள் எரிவாயுக்காக வீதிகளில் சிலிண்டர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

எரிவாயு கப்பலொன்று இலங்கையின் கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள போதும், அதற்கு செலுத்துவதற்கு டொலர் இல்லாமையினால் அதில் இருந்து எரிவாயுவை இறக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் எப்போது முதல் எரிவாயு விநியோகம் நடக்கும் என்று தெரியவில்லை.
இந்நிலையில் கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் உணவகங்கள் பல மூடப்பட்டுள்ளன.

எரிவாயு இல்லாத காரணத்தினால் 80 வீதமான உணவகங்கள் மற்றும் சிற்றூண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles