தோட்டக்காணிகளை பறிப்பதுதான் இ.தொ.காவின் யுக்தியா? சிவநேசன் கேள்வி

தோட்டக்காணிகளை பாற் பண்ணைகளுக்கு என சுவீகரிப்பது, தோட்ட தொழிலாளர்களை சிறு தோட்ட உடமையாளர்களாக மாற்றுவதற்கான யுக்தி என்பது இ.தொ.கா வின் நிலைப்பாடா? தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தோட்ட காணிகளில் பாற் பண்ணைகள் அமைக்க விவசாய அமைச்சு தீர்மானித்திருக்கின்றது. அதன் மூலம் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் தோட்ட மக்களிடம் இருந்து பறிபோகின்றது. இதன் மூலம் அத்தோட்டங்களில் வாழ்பவர்களின் வாழ்க்கைநிலை முற்று முழுதாக சரிந்து விழப்போகின்றது. இதுவரை தேயிலை தோட்டங்களில் வாழ்ந்து வந்தவர்கள், இனி பண்ணனைகளில் வாழ்பவர்களாக மாறப்போகின்றார்கள்.

இது தொடர்பாக இ.தொ.கா உப செயலாளர், “இது ஒரு யுக்தி” என குறிப்பிட்டிருக்கின்றார். அது மட்டுமல்லாது, தோட்ட காணிகள் பண்ணைகளாக மாற்றப்படும், ஆனால் தோட்ட தொழிலாளர்கள் சிறு தோட்ட உடமையாளர்களாக மாற்றப்படுவார்கள் என்கின்றார். இது இ.தொ.காவினது நிலைப்பாடா என மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

உண்மையை மூடிமறைத்து, அதனை நியாயப்படுத்த முயற்சிசெய்து, இறுதியில் என்ன சொல்வதென்று தெரியாது உளறியிருப்பது இதிலிருந்து தெரிகின்றது. காணியை பாற்பண்ணைகளுக்கு கொடுத்துவிட்டு எவ்வாறு தோட்ட மக்களை சிறுதோட்ட உடமையாளர்களாக்க முடியும்? இல்லை அவ்வாறு ஆக்குவதற்கு உங்கள் தலைவர்கள் மந்திரவாதிகளாக மாறிவிட்டார்களா?

அரசாங்கத்தில் இருந்து சலுகை பெறுவதற்காக மக்களை காட்டிக்கொடுக்க வேண்டாம். அரசாங்கம் மக்களுக்கு செய்யும் வஞ்சகங்களை நியாயப்படுத்த வேண்டாம். அரசாங்கத்திற்குள் எமது மக்களுக்கு ஏற்படும் அநியாயங்களை சுட்டிக்காட்டுங்கள். எடுத்துக்கூறுங்கள். அதற்கு தைரியம் இல்லையென்றால், ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள்.

அதை விட்டு இவ்வாறான முட்டாள் தனமான அறிக்கைகளை விட்டு மக்களை ஏமாற்றாதீர்கள். மோசடி செய்யும் அமைச்சர்களை காப்பாற்ற நியாயம் கூறாதீர்கள். மக்கள் தூங்கிக்கொண்டு இல்லை. விழித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

தோட்டக்காணிகளை பாற் பண்ணைகளுக்கு என சுவீகரிப்பது, தோட்ட தொழிலாளர்களை சிறு தோட்ட உடமையாளர்களாக மாற்றுவதற்கான யுக்தி என்பது இ.தொ.கா வின் நிலைப்பாடா? தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் கேள்வி.

தோட்ட காணிகளில் பாற் பண்ணைகள் அமைக்க விவசாய அமைச்சு தீர்மானித்திருக்கின்றது. அதன் மூலம் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் தோட்ட மக்களிடம் இருந்து பறிபோகின்றது. இதன் மூலம் அத்தோட்டங்களில் வாழ்பவர்களின் வாழ்க்கைநிலை முற்று முழுதாக சரிந்து விழப்போகின்றது. இதுவரை தேயிலை தோட்டங்களில் வாழ்ந்து வந்தவர்கள், இனி பண்ணனைகளில் வாழ்பவர்களாக மாறப்போகின்றார்கள்.

இது தொடர்பாக இ.தொ.கா உப செயலாளர், “இது ஒரு யுக்தி” என குறிப்பிட்டிருக்கின்றார். அது மட்டுமல்லாது, தோட்ட காணிகள் பண்ணைகளாக மாற்றப்படும், ஆனால் தோட்ட தொழிலாளர்கள் சிறு தோட்ட உடமையாளர்களாக மாற்றப்படுவார்கள் என்கின்றார். இது இ.தொ.காவினது நிலைப்பாடா என மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

உண்மையை மூடிமறைத்து, அதனை நியாயப்படுத்த முயற்சிசெய்து, இறுதியில் என்ன சொல்வதென்று தெரியாது உளறியிருப்பது இதிலிருந்து தெரிகின்றது. காணியை பாற்பண்ணைகளுக்கு கொடுத்துவிட்டு எவ்வாறு தோட்ட மக்களை சிறுதோட்ட உடமையாளர்களாக்க முடியும்? இல்லை அவ்வாறு ஆக்குவதற்கு உங்கள் தலைவர்கள் மந்திரவாதிகளாக மாறிவிட்டார்களா?

அரசாங்கத்தில் இருந்து சலுகை பெறுவதற்காக மக்களை காட்டிக்கொடுக்க வேண்டாம். அரசாங்கம் மக்களுக்கு செய்யும் வஞ்சகங்களை நியாயப்படுத்த வேண்டாம். அரசாங்கத்திற்குள் எமது மக்களுக்கு ஏற்படும் அநியாயங்களை சுட்டிக்காட்டுங்கள். எடுத்துக்கூறுங்கள். அதற்கு தைரியம் இல்லையென்றால், ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள். அதை விட்டு இவ்வாறான முட்டாள் தனமான அறிக்கைகளை விட்டு மக்களை ஏமாற்றாதீர்கள். மோசடி செய்யும் அமைச்சர்களை காப்பாற்ற நியாயம் கூறாதீர்கள். மக்கள் தூங்கிக்கொண்டு இல்லை. விழித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Related Articles

Latest Articles