தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து சபையில் திகா கேள்வி!

” அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகவுள்ளது. இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் 1,700 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வருகின்றது.

உண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடக்கின்றதா? அந்த சம்பள அதிகரிப்பு எப்போது செய்யப்படும் என்று கூறினால் அதற்கு தேவையான உதவிகளை எங்களால் வழங்க முடியும்.”

இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

‘அவுட்குரோ” முறைமைக்கு போக வேண்டும் என்று கூறுகின்றனர். இது பற்றி தெளிவுபடுத்தினால், ஒத்துழைப்பு வழங்க முடியும்.” எனவும் நாடாளுமன்றத்தில் நேற்று திகாம்பரம் குறிப்பிட்டார்.

 

Related Articles

Latest Articles