ஹப்புத்தளை பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையொன்றில் இன்று அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத நபரொருவர், தொழிற்சாலையில் இருந்த பணப்பெட்டியை களவாடி செல்வது சிசிடி கமராவில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு களவாடப்பட்ட பணப்பெட்டியை அருகில் இருந்த பாடசாலை மைதானத்தில் வைத்து உடைத்து 30 லட்சம் ரூபாவை எடுத்துச்சென்றுள்ளார்.
குறித்த பணம் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் என தொழிற்சாலை உரிமையாளர் தெரிவித்தார்.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
ராமு தனராஜா










