இதொகாவின் பிரதான மே தின கூட்டம், பேரணி ரத்து! தோட்டவாரியாக நடத்த ஏற்பாடு!

சர்வதேச தொழிலாளர் தினத்தன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் வழமையாக பிரமாண்டமாக நடத்தப்படும் பிரதான கூட்டம் மற்றும் பேரணி என்பன இம்முறை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார சுமையை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட வாரியாக மேதின நிகழ்வுகளை சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

Related Articles

Latest Articles