தோட்ட அதிகாரிகள் மீதான தாக்குதல்களுக்கு தோட்ட துரைமார் சங்கம் கடும் கண்டனம்

பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்குரிய (RPC) இரு வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் வேலை செய்யும் அதிகாரி ஒருவரும் மற்றும் உதவி அதிகாரி ஒருவர் மீதும் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை பெருந்தோட்ட துரைமார் சங்கம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.

இந்த கடும் தாக்குதலால் கடுமையாக காயங்களுக்குள்ளான இரு ஊழியர்களும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் தலையிட்டு பெருந்தோட்டத்தில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் இனி இடம்பெறாத வண்ணம் தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சங்கம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுதெடர்பாக இலங்கை பெருந்தோட்ட துரைமார் சங்கத்தின் பொதுச் செயலாளர் லலித் ஒபேசேகர, “இந்த வருடத்தில் மாத்திரம் RPC தோட்டங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

RPCக்கு சொந்தமான தோட்டங்களில் தேயிலை உற்பத்தி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட குழுக்களால் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டங்களில் வேலை செய்யாதவர்களால் உந்தப்பட்டு மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல் செயற்பாடு மற்றும் அச்சுறுத்தல் குறித்து நாம் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றோம்.” என தெரிவித்தார்.

“சட்டம் மற்றும் ஒழுங்கு இந்தளவுக்கு பாரிய அளவில் சீர்குலைந்துள்ளதை பார்த்துக்கொண்டிருத்தல் மற்றும் பெருந்தோட்ட சமூகத்தை வன்முறைகளுக்கு ஈடுபடுத்தும் இவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமை குறித்து நாம் அதிர்ச்சியடைந்துள்ளோம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவன குழுமத்திற்கு சொந்தமான ஓல்டன் தோட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவம், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் RPCs சார்பில் ஆஜரான இலங்கை தொழிலாளர் சம்மேளனம் ஆகியவற்றுக்கு இடையில் அண்மையில் தொழில் அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் தொடர்பிருப்பதாக அறிய முடிகிறது.

ஓல்டன் தோட்டத்தில் தொழிலாளர்களின் அன்றாட சம்பளத்தை 1000 ரூபாவாக ஆக்குவதற்கு RPCகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தொழிற்சங்கங்களினால் வேலை நிறுத்தமொன்றில் ஈடுபட்டு அந்த தோட்டபத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர். அதனால் வேலை நிறுத்தத்திற்கு முன்னர் பறிக்கப்பட்ட பச்சைத் தேயிலைக் கொளுந்துகள் 7,000 கிலோ வீணானதுடன் அதனை வீச வேண்டி ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் ஏல விற்பனைக்காகவும் மற்றும் விநியோகிப்பதற்காகவும் தயார்படுத்தப்பட்டிருந்த ஒருதொகை தேயிலையை தொழிற்சாலையிலிருந்து வெளியே கொண்டுவர விடாது பலவத்தமாக இடையூறு விளைவித்தனர். இந்த ஒட்டுமொத்த தேயிலை தொகையின் பெறுமதியானது 6 மில்லியன் ரூபாவை சர்வதேச கொள்வனவாளர் ஒருவர் செலுத்தி முடித்திருந்துள்ளார். இந்த கொடுக்கல் வாங்கல்களுக்கு நிறுவனம் சட்டரீதியாக கட்டுப்பட்டு இருந்ததனால் இதுகுறித்து பொலிஸாருக்கு முறைப்பாடொன்றையும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகாமையாளர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து சேதப்படுத்தி நட்டம் ஏற்படுத்துதல், வீட்டு பொருட்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், தொழிற்சாலைகளில் தண்ணீர் மற்றும் மின்சார தொடர்புகளை துண்டித்தல் மற்றும் தோட்ட அதிகாரிகளுக்கும் அவர்களது உதவி அதிகாரிகளுக்கும் மற்றும் அவர்களது வீட்டு உறவினர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதற்காக தொழிற்சங்க குழுக்களுக்கு ஒத்துழைப்புக்களையும் அதிகாரங்களையும் வழங்குவது சர்வ சாதாரணமான நிலையாக மாறியுள்ளது, இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என சங்கம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

“விசேடமாக எமது நாட்டிற்கு அந்நிய செலாவணி தேவையான ஒரு காலகட்டத்தில் இந்த தேயிலைத் தொகை விநியோகத்தை தடுத்தமை பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அதனூடாக ஏற்றுமதி வருமானத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும்.”

“ஏலத்திற்கு அனுப்புவதற்காக வைத்திருந்த தேயிலையை விநியோகிப்பதற்கு இடையூறு ஏற்படுத்தி வெளிநாட்டு சந்தையை மட்டுமன்றி இலங்கைக்கு கிடைக்கவிருந்த அந்நிய செலாவணியையும் இல்லாமல் செய்தது துரதிர்ஷ்டவசமான நிலைமையால் தேயிலை தொழிலை வீழ்ச்சியடையச் செய்வது மட்டுமன்றி பொருளாதாரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.” என ஒபேசேகர தெரிவித்தார்.

“தேயிலை தொழில் கொவிட் – 19 தொற்றுநோய் காலப்பகுதி முழுவதிலும் தொடர்ச்சியாக செயற்பட்ட துறையாக இருப்பதுடன் தோட்டங்களில் வேலை செய்யும் அனைவருக்கும் உணவு, மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய விநியோகம் போன்றே வருவாயை ஈட்டக்கூடிய வழியை ஏற்படுத்திக் கொடுப்பதை உறுதிப்படுத்துவதற்காக எம்மால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தோம். அத்துடன் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தில் அத்தியாவசிய வெளிநாட்டு செலாவணியை நாம் ஈட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

பெப்ரவரி 17ஆம் திகதி ஓல்டன் தோட்டத்தில் இடம்பெற்ற இந்த பாரிய தாக்குதல் RPC தோட்டங்களுக்கு எதிரான தாக்குதல் தொடரில் புதிய சம்பவமாக குறிப்பிட முடியும். இதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ரமேஷ்வரன் கந்தப்பளை பார்க் தோட்டத்தில் பயிலுநரான தோட்ட அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதுடன் அவரை மீட்டு வெளியே கொண்டுவருவதற்கு பாதுகாப்பு பிரிவினர் சுமார் ஐந்து மணிநேரத்திற்கும் அதிகமான காலம் எடுத்தது. அவர் இதுவரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

2021 பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் இதேபோன்று மற்றுமொரு இளைஞர் குழுவின் தாக்குதல் ஒன்று பண்டாரவளை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

“இவ்வாறான வெறுமனே தாக்குதல்கள் ஒவ்வொரு தோட்டத்திலும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க ஒரு பிரச்சினையின் பிரதிபலிப்பிற்காக அல்ல, அந்தந்த தோட்டங்களில் தேயிலை அறுவடையால் கிடைக்கும் வருமானத்தை சீர்குலைக்கும் நோக்கிலேயே இவ்வாறான வன்முறைகள் திட்டமிடப்படுகின்றன என்றே நான் நம்புகின்றேன். இவ்வாறான செயற்பாடுகளுக்கு யார் பொறுப்பாக இருந்தாலும் சரி எந்த தரப்பு பொறுப்பேற்றாலோ அதன் இறுதி முடிவானது நாட்டிற்கு பாரிய பாதிப்பாகவே அமையுமென்பது உண்மையான விடயமாகும்.” என ஒபேசேகர மேலும் குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles