” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வருமான பங்கீட்டு முறைமை அமைய சம்பளம் வழங்குவது உகந்தது.” – என்று பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளன ஊடகப் பேச்சாளரான ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.
இந்த முறைமைக்கு பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவிக்கின்றன என்று ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது தான் சுட்டிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் அறியத்தருமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோட்டக் கம்பனி பிரதானிகளுக்கு இன்று பணிப்புரை வழங்கினார்.










