நல்லூர் கந்தன் பெருந்திருவிழா 9 ஆம் திகதி ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழாவிற்கான கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன், பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று, பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந் திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்கள் திருவிழா இடம்பெறவுள்ளது

Related Articles

Latest Articles