நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இன்று நள்ளிரவுடன் இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரிமைக்கமைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.
இதற்கமைய புதிய கூட்டத்தொடர் பெப்ரவரி 8 ஆம் திகதி ஆரம்பமாகும்.
நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டு, புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும்போது ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை இடம்பெற வேண்டும். ஜனாதிபதியே சம்பிரதாயப்பூர்வமாக சபை அமர்வை ஆரம்பித்து வைப்பார். இதன்படி அரசின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான கொள்கை திட்டத்தை ஜனாதிபதி முன்வைப்பார்.
அதேபோல நாடாளுமன்றத்தில் தற்போது இயங்கும் கோப், கோபா உள்ளிட்ட குழுக்கள் செயலிழக்கும். புதிய கூட்டத்தொடரின் பின்னர் புதிய குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்.
