அரசிலிருந்து விலகி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது என வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அவ்வாறு எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. அது பற்றி பேச்சு நடத்தப்படவும் இல்லை. அரசிலிருந்து வெளியேறுமாறு எவரும் எமக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. நாமல் ராஜபக்ச விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் எனக்கு தெரியாது. தற்போது தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளை பார்ப்பதற்கு எனக்கு நேரம் இல்லை. கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன்.
புதிய வேலைத்திட்டத்தை உருவாக்கிவருகின்றோம். பல கட்சிகள் பேச்சு நடத்திவருகின்றன.” – என்றார்.