நாடாளுமன்ற உணவகப் பிரிவில் இறைச்சி, மீன், முட்டை மற்றும் கறுவாடு போன்றன வெளியில் எடுத்துச் செல்லப்படும் சம்பவங்கள் முன்னர் எப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது.
இவ்வாறு உணவு பொருட்கள் வெளியில் எடுத்துச் செல்லப்படுவதால், அரசுக்கு வருடாந்தம் மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளமை காரணமாக சில ஊழியர்கள் அவற்றை தினமும் இரகசியமாக வீடுகளுக்கு எடுத்துச் செல்வதாக தெரியவந்துள்ளது என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதிகாரிகள் இது சம்பந்தமாக நாடாளுமன்ற பிரதானிகளுக்கு ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளனர்.
இவ்வாறான மோசடிகளை தடுக்க நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க உட்பட உயர் அதிகாரிகள் அடிக்கடி ஆலோசனை வழங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும் உணவு பொருட்கள் வெளியில் எடுத்துச் செல்லப்படுவது சூட்சுமான முறையில் தொடர்ந்தும் நடந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.










