ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் இன்று உறுதியேற்றார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போதே சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து உறுதியேற்றார் முஜிபுர் ரஹ்மான்.
