நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!

அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல நடிகருமான உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் உள்ள வீட்டுக்கு முன்னால் வைத்தே நேற்றிரவு 10.30 மணியளவில் , குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அவர் மட்டுமே வாகனத்துக்குள் இருந்துள்ளார். வாகனத்தில் பின்பகுதியிலேயே சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பியோடியுள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விசாரணைகள் சிஐடியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles