நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், மரண எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு நாட்டை உடன் முடக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கங்களும், ஏனைய சுகாதார தரப்புகளும் வலியுறுத்திவருகின்றன.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து முடிவொன்றை எடுப்பதற்காக கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுவருகின்றது.
நாடு முடக்கப்படுமா அல்லது கடும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுமா அல்லது அடுத்தக்கட்டம் என்னவென்பது தொடர்பில் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரியவருகின்றது.