நாட்டில் மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடா?

நாட்டில் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தட்டுப்பாடின்றி கொள்வனவு செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபையில் தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் இரண்டு காலாண்டுகளுக்கான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் தற்போதைய சூழ்நிலையில் வைத்தியசாலை கட்டமைப்பில் மின் துண்டிப்பு இடம்பெற்றாலும் ஜெனரேட்டர் மூலம் போதிய மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளருடனும் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய மருந்து உற்பத்தியை 30வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பெரசிட்டமோலுக்கு சிறியளவில் தட்டுப்பாடு காணப்பட்டாலும் தற்போது அந்த நிலை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதற்கான தட்டுப்பாடு ஏற்படுமானால் அது வங்கி நாணய கடிதம் திறப்பதிலேயே இடம்பெறவேண்டும்.

எவ்வாறாயினும் அது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் செயலாளருடனும் கலந்துரையாடியுள்ளோம் என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles