நாட்டில் மேலும் 40 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. பீசீஆர் பரிசோதனைமூலம் அவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 19 பேருக்கும், மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 21 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி மினுவங்கொட கொத்தணியில் இதுவரையில் 2,130 இற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.