நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 14 ​பேருக்கும் , தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 35 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி மினுவங்கொடை கொரோனா கொத்தணியில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,900 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் ஐவர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,385 ஆக அதிகரித்துள்ளது.

Paid Ad