நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் பயணித்த சொகுசு காரொன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்தது வீதியோரத்தில் உள்ள கற்பாறையில் மோதி (15) இன்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் நால்வர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி – அக்குரணை பகுதியில் இருந்து நுவரெலியாவிற்கு வருகைத்தந்து நானுஓயா டெஸ்போட் வழியாக கொழும்பு நோக்கி சென்ற சொகுசு கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடது பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டு கற்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
