நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் பஸ் விபத்து – 8 பேர் காயம்!

நானுஓயா, ரதல்ல குறுக்கு பாதையில் இன்றிரவு (22) பஸ்ஸொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சுமார் 8 பேர்வரை காயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறை பகுதியில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகளை ஏற்றிவந்த பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ்ஸில் 40 பேர்வரை பயணித்துள்ளனர், 20 பேர்வரை காயம் அடைந்துள்ளனர் என ஆரம்பத்தில் கூறப்பட்டாலும், 8 பேரே வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

அதிக வேகம் மற்றும் சாரதியின் கவனயீனமே விபத்துக்கு காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

ஆ. ரமேஷ், டி. சந்ரு, நானுஓயா நிருபர்

Related Articles

Latest Articles