எயார்பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றிருந்த நாமல் ராஜபக்சவிடம் சுமார் 5 மணிநேரம் அது தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டது.
அதன்பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்கள வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச,
‘விடுமுறை நாளில்கூட எம்மை விசாரணைக்கு அழைக்கின்றனர். எம்மை விசாரிப்பதற்கு காட்டும் ஆர்வத்தை மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் தற்போதைய அரசாங்கம் காண்பிக்க வேண்டும்.” – என தெரிவித்தார்.