பாதாள உலக தலைவர் கஞ்சிபானி இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி நாமத்த ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
கஞ்சிபானி இம்ரான் பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,லொக்கு பட்டி டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரானால் திட்டமிடப்பட்டதாகவும், டுபாயைச் சேர்ந்த பாதாள உலகக் குழு உறுப்பினர் லொகு பட்டி என்பவரால் வழி நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாக இருந்தன.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பிரான்சில் பதுங்கியிருந்த கஞ்சிபானி இம்ரான், பெலாரஸ் நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது பிரான்ஸ் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கஞ்சிபானி இம்ரான் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டிருந்தார். பின்னர் நீதிமன்றம் பிணை வழங்கியதும் நாட்டை விட்டு தப்பியோடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
