மாத்தளை மாவட்ட நீதிமன்ற களஞ்சியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வழக்கு பொருளான ஐந்து யானைத்தந்த முத்துக்களை திருடி சீன வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்ய முயற்சித்த சந்தேகநபர்களை எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
களஞ்சியசாலை பொறுப்பதிகாரி சமீர பதுசங்க பண்டார, நீதிமன்றத்தின் காரியாலய உதவியாளர் அசங்க புஷ்ப குமார மாத்தளை கய்காவலையைச் சேர்ந்த திஸ்ஸ ஜயரத் பண்டார, பி.எம்.நலீன் ரத்நாயக்க மற்றும் சந்தன புஷ்ப குமார ஆகிய சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாத்தளை மாவட்ட களஞ்சியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த யானை முத்துக்களை திருடி சீன வர்த்தகரொருவருக்கு இரகசியமாக விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். ஐவரையும் எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.










