நீதி அமைச்சராகிறார் அலிசப்ரி! மஹிந்தானந்தவும் அமைச்சரவையில்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் நீதி அமைச்சராக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி நியமிக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அத்துடன், இளைஞர் விவகாரம், திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சு நாமல் ராஜபக்சவுக்கும் , கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுப் பதவி பேராசிரியர் ஜீ.எல். பீரிசுக்கும் வழங்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி சுபவேளையில் பதவியேற்கவுள்ளது. கண்டி தலதாமாளிகையிலுள்ள ‘மகுல் மடுவ’ எனும் மண்டபத்தில் இதற்கான நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

சுற்றாடல், வனஜீவராசிகள் துறை அமைச்சராக உதய கம்மன்பிலவும், நிதி இராஜாங்க அமைச்சராக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் தேசியப்பட்டியல் எம்.பியுமான அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படவுள்ளார்.

அத்துடன், மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் இம்முறை அமைச்சரவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

கலாச்சார மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படவுள்ளார் எனவும் அறியமுடிகின்றது. அதேபோல் இறுதிநேரத்தில்கூட அமைச்சுகளுக்கான விடயதானங்கள் மாறக்கூடும் எனவும் கூறப்படுகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles